”82 இன்ச் பிரமாண்ட டிவிக்கள்” – சியோமி நிறுவனம் அறிமுகம்

 

”82 இன்ச் பிரமாண்ட டிவிக்கள்” –  சியோமி நிறுவனம் அறிமுகம்

82 இன்ச் பிரமாண்ட திரை கொண்ட டிவிக்களை சியோமி நிறுவனம் சீனாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

”82 இன்ச் பிரமாண்ட டிவிக்கள்” –  சியோமி நிறுவனம் அறிமுகம்

லக்ஸ் அல்ட்ரா என்ற பெயரில் வந்துள்ள இந்த டிவிக்கள், ஒஎல்இடி பின்புற ஒளி அமைப்புடன் இரு வகைகளில் அறிமுகமாகி உள்ளது. இதில் 82 இன்ச் 4கே டிவி, இந்திய மதிப்பில் 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும், 82 இன்ச் 8கே டிவி, 5 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்க்கும் சியோமி அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த டிவிக்களில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி – 256 ஜிபி என இருவேறு மெமரி அளவுகள், எம்இஎம்சி தொழில்நுட்பம், டால்பி விஷன் சப்போர்ட், ஒரு ஜிகா பைட் ஈத்தர்நெட் போர்ட், என்எப்சி கொண்ட ரிமோட் என சகல ஐடெக் சமாச்சாரங்களையும் உள்ளடக்கி வெளிவந்துள்ளது.

”82 இன்ச் பிரமாண்ட டிவிக்கள்” –  சியோமி நிறுவனம் அறிமுகம்

இதில் என்எப்சி கொண்ட ரிமோட்டை ஸ்மார்ட்போனை கொண்டு தொட்டாலே , போனின் திரையை டிவியில் கேஸ்ட் செய்துவிடலாம் என கூறப்படுகிறது. மேலும் வைபை, புளூடூத் என அனைத்து ஸ்மார்ட் ஆப்ஷன்களும் கொண்ட இந்த டிவிக்கள் இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து சியோமி நிறுவனம் தகவல் தெரிவிக்கவில்லை.