82 வயதிலும் பாடி பில்டராக இருக்கும் பெண் ! கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்ற மூதாட்டி

82 வயதிலும் பாடி பில்டராக இருக்கும் பெண் ! கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்ற மூதாட்டி

தனது 82வது வயதிலும், பாடி பில்டராக சாதித்து காட்டியுள்ளார் நியூயார்க்கில் ஒரு மூதாட்டி. பொதுவாக பாடி பில்டர் என்றால் ஆண்கள்தான் நினைவுக்கு வருவார்கள். பாடி பில்டராக இருப்பது பெண்களுக்கு எளிதான காரியம்அல். ஆனால் நியூயார்க்கில் 82 வயதான எர்னிஸ் ஷெப்பர்டு என்ற 82 வயது மூதாட்டி அதைச் சாதித்து காட்டியிருக்கிறார்.

82-yr-old-bodybuilder

எர்னிஸ் ஷெப்பர்டு தன்னுடைய சிறு வயதில் ஒரு விபத்தில் சிக்கினார். அதில் அவரின் கால் முட்டியில் பலமாக அடிபட்டிருந்தது. அதனால் உடற்பயிற்சி எதுவும் செய்ய இயலாது என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து எதாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணிய எர்னிஸ் ஐம்பதாவது வயதில் அவருடைய சகோதரியுடன் இணைந்து ஏரோபிக் பயிற்சியை மேற்கொண்டார். 1992ஆம் ஆண்டில் பாடி பில்டிங் பயிற்சியைத் தீவிரமாகக் கற்றுவந்தார். இவரின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் ஓடிக் கொண்டே இருந்தார். 
71ஆவது வயதில் பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்றார். பின்னர் வயதானவர்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுப் பதக்கம் வென்றார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று குவித்தார். இவரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக 2010ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இவர் பெயர் இடம்பெற்றது.