‘ஜுவல்லரி நிறுவனத்தில் கணக்கில் வராத 814 கிலோ தங்க நகைகள்’ – ஐ.டி ரெய்டில் அம்பலம்!

 

‘ஜுவல்லரி நிறுவனத்தில் கணக்கில் வராத 814 கிலோ தங்க நகைகள்’ – ஐ.டி ரெய்டில் அம்பலம்!

வருமான வரித்துறை அதிகாரிகள் ஜுவல்லரி நிறுவனத்தில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் மற்றும் தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

சமீப காலமாக தமிழகத்தில் ஊழலும், வரி ஏய்ப்பும் அதிகமாக அரங்கேறி வருகிறது. கடந்த வாரம் ஹெரிடேஜ் ஓட்டல் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ஐ.டி ரெய்டில், ரூ.1,000 கோடி வருமானம் மறைக்கப்பட்டதும் பினாமி பெயரில் 300 ஏக்கர் நிலம் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

‘ஜுவல்லரி நிறுவனத்தில் கணக்கில் வராத 814 கிலோ தங்க நகைகள்’ – ஐ.டி ரெய்டில் அம்பலம்!

இதை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர், தனியார் ஜூவல்லரி நிறுவனத்துக்கு சொந்தமான 32 இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை நெல்லை, மதுரை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஜூவல்லரி நிறுவனத்தில் நடந்த ரெய்டில் கணக்கில் வராத ரூ.500 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கணக்கில் வராத ரூ.400 கோடி மதிப்பிலான 814 கிலோ தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.