81,000 ஃபேஸ்புக் கணக்குகளின் குறுஞ்செய்திகள் ஆன்லைனில் கசிவு!

 

81,000 ஃபேஸ்புக் கணக்குகளின் குறுஞ்செய்திகள் ஆன்லைனில் கசிவு!

81 ஆயிரம் ஃபேஸ்புக் கணக்குகளின் தனிப்பட்ட குறுஞ்செய்திகள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கலிஃபோர்னியா: 81 ஆயிரம் ஃபேஸ்புக் கணக்குகளின் தனிப்பட்ட குறுஞ்செய்திகள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உக்ரைன், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட குறுஞ்செய்திகள் ஹேக்கர்களிடம் சிக்கியுள்ளது. கிட்டத்தட்ட 81 ஆயிரம் கணக்குகளின் குறுஞ்செய்திகள் ஹேக்கர்களிடம் சிக்கியுள்ளதாம்.

தங்கள் நண்பர்களுடன் பேசியது, மருமகனைப் பற்றி தோழியிடம் மாமியார் குறை கூறி புறம் பேசுவது உட்பட அனைத்து தனிப்பட்ட குறுஞ்செய்திகளையும் பணத்திற்கு ஹேக்கர்கள் விற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஒரு பயனாளரின் குறுஞ்செய்தி விவரத்தைக் கொடுக்க 10 சென்ட் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7 ரூபாய் வரை ஹேக்கர்கள் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில், ஃபேஸ்புக்கின் தகவல் பாதுகாப்பு பிரிவுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.