8100 கோடி கடன் வாங்கி விட்டு தப்பி ஓடிய தொழிலதிபர் அல்பேனியாவில் கைது

 

8100 கோடி கடன் வாங்கி விட்டு தப்பி ஓடிய தொழிலதிபர் அல்பேனியாவில் கைது

போலி ஆவணங்கள் மூலம் வங்கிக்கடன் பெற்றுக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய குஜராத் தொழிலதிபர் அல்பேனியா நாட்டில்  கைது செய்யப்பட்டிருக்கிறார்.

போலி ஆவணங்கள் மூலம் வங்கிக்கடன் பெற்றுக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய குஜராத் தொழிலதிபர் அல்பேனியா நாட்டில்  கைது செய்யப்பட்டிருக்கிறார்.

போலி ஆவணங்கள் மூலம் மோசடி 

குஜராத்தின் வதோதராவை மையமாக கொண்டு இயங்கி வந்த ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ என்ற நிறுவனம் தான் பல்வேறு அரசு பொதுத்துறை வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம்  ரூ.8100 கோடி அளவில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 300-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களையும், பினாமி பெயரில் உள்ள நிறுவனங்களையும் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

sterling biotech

இந்த மோசடி தொடர்பாக ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளர்களான நிதின் சந்தேசரா சேத்தன் சந்தேசரா, மற்றும் அவர்களின் மைத்துனர் ஹிதேஷ் படேல் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

அல்பேனியாவில் கைது 

ஆனால், அவர்கள் அனைவரும் வழக்கம் போல நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தப்பி ஓடிய தொழில் அதிபர்களில் நிதின் சந்தேசரா, நைஜீரியாவில் இருப்பதாக கடந்த ஆண்டு இறுதியில் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே சந்தேசரா சகோதரர்களின் மைத்துனரும், இந்த கடன் மோசடியில் முக்கிய குற்றவாளியுமான ஹிதேஷ் படேல், தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் சிக்கியுள்ளார்.

sterling biotech

இந்த மோசடியில் முக்கிய கருவியாக விளங்கியவர் ஹிதேஷ் படேல் ஆவார். எனவே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அவர் தேடப்பட்டார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.