ஒரே நாளில் 81 ஆயிரம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

ஒரே நாளில் 81 ஆயிரம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

கொரோனா நோய்த்தொற்றின் புதிய நோயாளிகளின் என்ணிக்கை கடந்த சில நாட்களாக இந்தியாவில் குறைந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 87 லட்சத்து 55 ஆயிரத்து 295 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 91 லட்சத்து 30 ஆயிரத்து 507 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 96 ஆயிரத்து 998 பேர்.

ஒரே நாளில் 81 ஆயிரம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் இந்தியா, பிரேசில் நாடுகளை விடவும் அமெரிக்காவில் அதிகம். அமெரிக்காவில் 970, பிரேசிலில் 694, இந்தியாவில் 716 பேரும் நேற்று இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை 1,11,311 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள்.

ஒரே நாளில் 81 ஆயிரம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் பரிசோதனைகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 81,514 நோயளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8,12,390 ஆகும். நாட்டில் இது வரை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளில் இது 11.12 சதவீதமாகும்.

ஒரே நாளில் 81 ஆயிரம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் 67,708 புதிய பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 77 சதவீதம் பத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகி உள்ளது. மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாம் இடத்திலும் உள்ளன.