81வயது மூதாட்டியை திருமணம் செய்த 24 வயது இளைஞர்: அதிர வைக்கும் காரணம்!

 

81வயது மூதாட்டியை திருமணம் செய்த 24 வயது இளைஞர்:  அதிர வைக்கும் காரணம்!

81 வயது மூதாட்டியை 24 வயதான இளைஞர் திருமணம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

81 வயது மூதாட்டியை 24 வயதான இளைஞர் திருமணம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

youth

உக்ரைனில் இளைஞர்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர் .இதை விரும்பாத  24 வயதான அலெக்ஸாண்டர் கொன்ட்ராட்யுக் என்கிற இளைஞர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். திருமணம் செய்தல் தப்பிக்க வாய்ப்புள்ளதா? என்று கேட்கலாம். ஆனால்  அந்த நாட்டில் வீட்டில் இருக்கும் மனைவி மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவரது கணவர் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்ற விதி ஒன்று உள்ளது. இதை பயன்படுத்தியே அந்த இளைஞர் ராணுவ சேர்க்கையிலிருந்து தப்பிக்க முடிவெடுத்துள்ளார்.

granny

ஆனால்  அவர் தேர்ந்தெடுத்தது 81 வயது மூதாட்டியைத் தான். ஆம் அதே  தனது கிராமத்தில் இருக்கும் தனது உறவுமுறை மூதாட்டியான 81 வயது ஸினைடா இல்லாரியோனோவ்னா-வை அலெக்ஸாண்டர் மணம் முடித்துள்ளார்.  இதனால் அந்த இளைஞரைத் தேடி ராணுவத்தில் இருந்து ஆட்கள் வந்தால், தனது மனைவி  மாற்றுத்திறனாளி என்ற சான்றிதழையும், அவர்களின் திருமண சான்றிதழையும் காண்பித்துத் தப்பி கொள்கிறார் இந்த இளைஞர்.இருப்பினும் இந்த திருமணத்திற்குப் பிறகு அந்த மூதாட்டி வீட்டுக்கு அலெக்ஸாண்டர்  செல்வது இல்லை என்று கூறப்படுகிறது.