80,000 பேருக்கு வேலை காலி! கடனில் தத்தளிக்கும் பி.எஸ்.என்.எல்! 

80,000 பேருக்கு வேலை காலி! கடனில் தத்தளிக்கும் பி.எஸ்.என்.எல்! 

தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பதற்காக கோட் சூட் எல்லாம் போட்டுக்கொண்டு லண்டன் சென்றிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. ரஷ்யாவின் மிக உயரிய விருது கொடுத்து பிரதமர் மோடியை கெளரவப்படுத்துகிறார்கள். நிற்க… இதெல்லாம் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் சத்தமே இல்லாமல் படுகுழிக்குள் விழுந்துக் கொண்டிருக்கிறது இந்தியாவின் பொருளாதாரம்.
ஏற்கெனவே வேலைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களை,

தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பதற்காக கோட் சூட் எல்லாம் போட்டுக்கொண்டு லண்டன் சென்றிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. ரஷ்யாவின் மிக உயரிய விருது கொடுத்து பிரதமர் மோடியை கெளரவப்படுத்துகிறார்கள். நிற்க… இதெல்லாம் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் சத்தமே இல்லாமல் படுகுழிக்குள் விழுந்துக் கொண்டிருக்கிறது இந்தியாவின் பொருளாதாரம்.

bsnl

ஏற்கெனவே வேலைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களை, ஆட்குறைப்பு என்கிற பெயரில் வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன பல தனியார் நிறுவனங்கள். இந்நிலையில், மத்தியிலும், மாநிலத்திலும், இவர்கள் ‘வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்காக’ அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 15 ஆயிரம் கோடி ரூபாய்கள் வரையில் பிஎஸ்என்எல் கடன் வைத்துள்ளது. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் பிரவீன்குமார் பர்வார் எகானமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், 80 ஆயிரம் பேருக்கு விருப்ப ஓய்வு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து அதிர்ச்சியளித்திருக்கிறார்.

bsnl

விருப்ப ஓய்வு அளித்த பிறகும் கூட பிஎஸ்என்எல் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒரு லட்சம் பேரை தாண்டுமாம். இந்த ஒரு லட்சம் பேர் பணியில் தொடர்ந்து இருப்பார்கள் என்றும், மீதமுள்ள பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.