செப்.12 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

 

செப்.12 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் வரையில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நீடித்து வந்தது. அதன் பிறகு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதே போல அந்தந்த மாநில அரசுகளின் ஒப்புதலுடன் பொதுப்போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. ஆனால் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி அளித்த மத்திய அரசு, சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கவில்லை.

செப்.12 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்டியலில் 2ஆவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல வரும் 7 ஆம் தேதி முதல் 13 சிறப்பு ரயில்கள் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் பயணிகள் ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வரும் இந்த நிலையில் வரும் செப்.12 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 80 சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செப்.10 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.