80 சதவிகித கொரோனா தொற்று தானாகவே சரியாகிவிடும்! – நம்பிக்கை தரும் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம்

 

80 சதவிகித கொரோனா தொற்று தானாகவே சரியாகிவிடும்! – நம்பிக்கை தரும் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம்

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் இறுதி வாரத்தில் கொரோனா பாதிப்பு வெளிப்பட்டது. பலருக்கும் இந்த தொற்று ஏற்பட்டது. உடனடி வுகான் எல்லைகள் மூடப்பட்டன. வுகானில் இருந்து மக்கள் வெளியேறத் தடைவிதிக்கப்பட்டது. அதற்குள்ளாக கிட்டத்தட்ட 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவிவிட்டது. ஆனால், சீனா அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக பரவுதல் தடுக்கப்பட்டது. 81 ஆயிரத்து 93 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 3270 பேர் மட்டுமே உயிரிழந்தனர். மற்றவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.

80 சதவிகித கொரோனா தொற்று தானாகவே சரியாகிவிடும் என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் வெளியிட்ட தகவல் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் இறுதி வாரத்தில் கொரோனா பாதிப்பு வெளிப்பட்டது. பலருக்கும் இந்த தொற்று ஏற்பட்டது. உடனடி வுகான் எல்லைகள் மூடப்பட்டன. வுகானில் இருந்து மக்கள் வெளியேறத் தடைவிதிக்கப்பட்டது. அதற்குள்ளாக கிட்டத்தட்ட 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவிவிட்டது. ஆனால், சீனா அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக பரவுதல் தடுக்கப்பட்டது. 81 ஆயிரத்து 93 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 3270 பேர் மட்டுமே உயிரிழந்தனர். மற்றவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர். கொரோனா எல்லோருக்கும் உயிரிழப்பை ஏற்படுத்துவது இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியைப் பொருத்து மாறுபடும் என்று தொடக்கத்திலிருந்தே மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இந்தியாவில் வேகமாக கொரோனா பரவும் நிலையில் அது பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. வதந்திகள் செய்யும் வேலை காரணமாக பீதிதான் அதிகமாக உள்ளது. 

corona-patient

இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் காட்டிய அலட்சியம் காரணமாகவே உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. உலக அளவில் 3.45 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 14,927 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில் 2.31 லட்சம் பேருக்கு கொரோனா உள்ளது. இதில், 10,633 பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அதாவது வெறும் ஐந்து சதவிகிதம் பேருக்குத்தான் தீவிர பாதிப்பை அது ஏற்படுத்தியுள்ளது. மற்ற 95 சதவிகிதம் பேருக்கு லேசான பாதிப்புதான் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 
உலக அமைப்புகள் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் 90 சதவிகிதம் என்று கூறும் நிலையில், இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் 80 சதவிகித நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு தானாகவே சரியாகிவிடும் என்று கூறியுள்ளது. 20 சதவிகித நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது என்றும், வெறும் 5 சதவிகித நோயாளிகளுக்கு மட்டுமே அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதாகவும் கூறுகிறது. நோயின் வீரியத்துக்கு ஏற்ப மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

aiims

கொரோனா வைரஸ் கிருமி காற்றில் பரவுவது இல்லை. சளி, இருமல் போன்ற நீர்த்துளிகள் சிதறல் மூலமாகவே பரவுகிறது. எனவே, ஒரு சில வாரங்கள் தனித்திருப்பது கொரோனாவை தவிர்க்கும் என்று அந்த அமைப்பு கூறுகிறது.
மொபைல் போன், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ஹலோ ஆப் என சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை நம்பி குழப்பம் அடைய வேண்டாம். விழிப்புடன் இருந்தாலே கொரோனாவை ஒழித்துவிடலாம்!