“ரூ.1.25 கோடி மதிப்பிலான”..வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் குட்கா பறிமுதல்!

 

“ரூ.1.25 கோடி மதிப்பிலான”..வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் குட்கா பறிமுதல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டதில் இருந்து இந்த போதை பொருட்கள் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். இதனிடையே குட்காவுக்கான மதிப்பும் வரவேற்பும் அதிகமாக இருப்பதால், பெரும்பாலும் குட்காவே கடத்தப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், கடலூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

“ரூ.1.25 கோடி மதிப்பிலான”..வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் குட்கா பறிமுதல்!

கடலூர் மாவட்டம் கே.என் பேட்டையில் இருக்கும் ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் திடீர் சோதனை மேற்கொண்ட போலீசார், வீடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். அதன் சந்தை மதிப்பு ரூ.1.25 கோடி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குட்காவை வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.