உங்கள் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கப்போறீங்களா… இந்த 8 விஷயங்களைச் செக் பண்ணுங்க!.

 

உங்கள் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கப்போறீங்களா… இந்த 8 விஷயங்களைச் செக் பண்ணுங்க!.

கொரொனா நோய்த் தொற்று உலகம் முழுவதுமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அதனால், பள்ளிகள், கல்லூரிகள் எதுவும் இயங்கவில்லை. தேர்வுகளைக்கூட ரத்து செய்துவிட்டார்கள். ஆனாலும், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டார்கள். பெற்றோர்களும் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர். அதாவது எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்ற தேடலைத் தொடங்கிவிட்டனர். தங்கள் பிள்ளையை எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பில் சேர்க்க பள்ளியைத் தேடும் பெற்றோர்களுக்கு, அப்பள்ளியில் செக் பண்ண வேண்டிய 8 விஷயங்களைப் பார்ப்போம்.

உங்கள் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கப்போறீங்களா… இந்த 8 விஷயங்களைச் செக் பண்ணுங்க!.

1. இப்போதைய சூழலிலிருந்து பார்க்கும்போது முதலில் பாதுகாப்பு. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். மேலும், அதற்கு தண்ணீர் வசதியும் போதுமான அளவுக்கு இயங்கும் வகையில் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

2. வகுப்பறைகள் காற்றோட்டமாக, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் எளிதில் வெளியேறும் வகையில் பெரிய வாசல் வசதி உள்ளனவா என்று பார்ப்பது அவசியம். ஏனெனில், சின்ன வயது குழந்தைகளுக்கான வகுப்புகளை சில பள்ளிகள் முதல் மாடி, இரண்டாம் மாடியில் வைத்திருக்கிறார்கள். அதனால் மாணவர்கள் எளிதாக ஏறி இறங்கக்கூட முடியாது.

3. பாடம் நடத்தும் ஆசிரியர்கள் அதற்கான தகுதி படிப்புகளை முடித்துள்ளாரா என்று செக் பண்ண வேண்டியது அவசியம். ஏனெனில், ஆசிரியர் பாடம் மட்டுமே நடத்தப்போவதில்லை. சுமார் எட்டு மணிநேரம் அந்த ஆசிரியரோடுதான் உங்கள் குழந்தை இருக்கப்போகிறது. ஆசிரியர் தகுதி படிப்பில்தான் ஒரு குழந்தையை எவ்விதம் கையாள்வது எனும் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவெ இது முக்கியமானது.

4. ஆசிரியர் அதற்கான படிப்பை முடித்தவராக இருந்தால் மட்டும் போது, ஒவ்வொரு குழந்தையின் நலன் மீது அக்கறை கொண்டவர்களை ஆசிரியர்களாக அந்தப் பள்ளி நியமித்திருக்கிறதா என்று செக் பண்ண வேண்டும். ஏனெனில், உங்கள் குழந்தையின் வகுப்பு ஆசிரியரை மட்டும் பார்த்தீர்கள் எனில், அவர் திடீரென்று வேலையை விட்டு விலகினால் அவருக்கு மாற்றாக வருபவரும் அவ்விதம் இருக்க வேண்டியதும் அவசியம்.

உங்கள் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கப்போறீங்களா… இந்த 8 விஷயங்களைச் செக் பண்ணுங்க!.

5. வகுப்பறைகளில் மாணவர்கள் பேச அனுமதிக்கப்படுவது மிகவும் முக்கியமானது. ஆசிரியர் பாடம் நடத்தும்போது இடையூறாகப் பேசுவது அல்ல. பாடம் நடத்தியதும் அதுகுறித்து சந்தேகங்களைக் கேட்கும் விதமாக சுதந்திரம் அளிக்கப்படுகிறதா… அல்லது ஆசிரியர் மட்டுமே கேள்வி கேட்பார் என்ற நிலை இருக்கிறதா என்பதையும் செக் பண்ண வேண்டும். அப்போதுதான் கற்றல் முழுமையாக நடக்கும்.

6. பெற்றோர் கருத்து மதிக்கப்படுகிறதா… பள்ளி என்பது ஒரு குழந்தைக்கு கல்வியும் பண்பாட்டையும் போதிக்கும் ஒரு நிறுவனம். அதில் பள்ளியை நடத்துபவர், ஆசிரியர் ஆகியவர்களோடு பெற்றோரும் முக்கியம். பெற்றோரின் கருத்துகளும் முதன்மையானவை. எனவே, பெற்றோர் தனது குழந்தையின் படிப்பை மட்டுமே பேச அனுமதி அளிக்கும் வாய்ப்பை அளிக்காது, பள்ளியின் வளர்ச்சி, நடத்தும் விதம் ஆகியவற்றிலும் கருத்து கேட்கும் பள்ளியாகப் பார்ப்பது நல்லது.

7. குறைவான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஒரு மாணவர் எவ்வாறு ஒரு பாடத்தைக் கற்றிருக்கிறார் என்பதை சோதிக்க தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கு அரசு ஒரு வரைமுறை வைத்திருக்கிறது. ஆனால், பல பள்ளிகளில் காலை நேரத்தைத் தொடங்குவதே ஒரு தேர்வை நடத்தித்தான் என்ற நிலை இருக்கிறது. நிறைய தேர்வுகள் நடத்தினால் மாணவர்களின் மன அழுத்தம் அதிகமாகும். அதனால் அவர்களால் இயல்பாகக் கற்றலை மேற்கொள்ள முடியும்.

8. மைதானம் இருக்கிறதா… வகுப்பறைகளைப் போலவே விளையாட்டு மைதானமும் மிக மிக அவசியம். அங்கேயும் கற்றல் நடக்கிறது. குழந்தைக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பாடம் தரும் அழுத்தத்தைக் குறைக்கவும் செய்யும். மேலும், குழந்தையின் உடலை வலுவாக்கவும் செய்யும்.

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்து உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியைத் தேர்தெடுங்கள். இதில் அவசரம் காட்ட வேண்டாம். அதேபோல விளம்பரங்களை மட்டுமே பார்த்து ஒரு பள்ளியை முடிவு செய்ய வேண்டாம்.