போதைக்காக கள்ளச்சாராயத்தில் சானிடைசர் கலந்து குடித்த 8 பேர் பலி!

 

போதைக்காக கள்ளச்சாராயத்தில் சானிடைசர் கலந்து குடித்த 8 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 16,38,870 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10,57,805 லட்சம் பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணிநேரத்தில் 55,079 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில் ஆந்திர மாநிலமும் ஒன்று.

போதைக்காக கள்ளச்சாராயத்தில் சானிடைசர் கலந்து குடித்த 8 பேர் பலி!

அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதே போல ஆந்திராவில் பல நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபானக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனிடையே பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்து வந்தது. அதுமட்டுமில்லாமல், சானிடைசரில் ஆல்கஹால் இருப்பதால் பலர் அதனை குடித்து உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் சாராயத்தில் சானிடைசர் கலந்து குடித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

போதைக்காக கள்ளச்சாராயத்தில் சானிடைசர் கலந்து குடித்த 8 பேர் பலி!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தின் சூரிமேடு கிராமத்தில் 50கும் மேற்பட்டோர் போதைக்காக கள்ளச்சாராயத்தில் சானிடைசர் கலந்து குடித்துள்ளனர். அதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், பலர் உடல் நிலை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.