சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 8 பேர் பலி!

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 18,000ஐ எட்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே 12,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க இடப் பாற்றாக்குறை இருப்பதால் நேரு உள் விளையாட்டு அரங்கம் கொரோனா வார்டாக மாற்றப்பட்டு வருகிறது. அதே போல நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டத்தின் படி, சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு மக்களை காக்க சென்னை மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகிறது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் எட்டு பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதனால், சென்னையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது.

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...