தலைமை செயலகத்தில் 8 பேருக்கு கொரோனா : பணியாளர்களை 33 சதவீதமாக குறைக்க கோரிக்கை!

 

தலைமை செயலகத்தில் 8 பேருக்கு கொரோனா : பணியாளர்களை 33 சதவீதமாக குறைக்க கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைமை செயலகத்தில் 8 பேருக்கு கொரோனா : பணியாளர்களை 33 சதவீதமாக குறைக்க கோரிக்கை!

அந்த வகையில் தலைமைச் செயலகத்தில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 8 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு சுமார் 6 ஆயிரம் பேர் பணிபுரிந்து வரும் நிலையில் கொரோனா அச்சம் காரணமாக 3 ஆயிரம் பேர் சுழற்சி முறையில் பணிசெய்து வருகிறார்கள். தற்போது இங்கு கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருவதால் அங்குள்ள மற்ற பணியாளர்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.


இந்நிலையில் தலைமை செயலகத்தில் தற்போது பணியாற்றி வரும் 50% பணியாளர்களை 33% பணியாளர்களாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர் சங்கம் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, 55 வயதை கடந்த நலமற்ற பணியாளர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர்களுக்கு பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.