மாநிலங்களவையில் கடும் அமளி : எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் !

 

மாநிலங்களவையில் கடும் அமளி : எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் !

விவசாய மாசோதாக்களை எதிர்த்து மாநிலங்களையில் அமளியில் ஈடுபட்டதால் எம்பிக்கள் எட்டு பேர் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் கடும் அமளி : எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் !

விவசாய மசோதாவுக்கு எதிராக அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் நேற்று(செப்.20) அமளியில் ஈடுப்பட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து, அவைத் துணைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். மேலும் அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களை கிழித்தெறிந்தனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்.ஓ.பிரையன், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உட்பட 8 எம்.பி.க்கள் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். அவையில் அத்துமீறி அமளியில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதனால் மாநிலங்களவையில் மீண்டும் கூச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவை மீண்டும் 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.