இந்தியாவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் பூங்கா நிர்வாகம்!

இந்தியாவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் பூங்கா நிர்வாகம்!

இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதற்கான முழு ஆதாரமமே இன்னும் வெளியாகவில்லை. ஆனால் கீரிப்பிள்ளை, பூனை, எறும்புத்திண்ணி ஆகிய விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என முழுமையடையாத ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் பூங்கா நிர்வாகம்!

இத்தகைய பரபரப்பான சூழலில் இந்தியாவில் சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அமெரிக்காவில் 8 சிங்கங்களுக்கும் புலிகளுக்கும், ஹாங்காங்கில் நாய்கள், பூனைகளுக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. முதல் முறையாக இந்தியாவில் விலங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் பூங்கா நிர்வாகம்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள நேரு விலங்கியல் பூங்காவில் இருக்கும் சிங்கங்களுக்கு இருமல் உள்ளிட்ட உடல்நலக் குறைவுகள் சில நாட்களாக இருந்துவந்துள்ளது. இதையடுத்து மருத்துவக் குழுவினர் விலங்குகள் அனைத்திற்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார்கள். முடிவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. இப்பூங்கா கடந்த இரு நாட்களுக்கு முன்னரே மூடப்பட்டது. பூங்காவிற்கு வந்த மக்களிடமிருந்து காற்றின் மூலம் சிங்கங்களுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.