ஒரே நாளில் 8 லட்சம் பரிசோதனைகள்: இந்தியாவில் கொரோனா நிலவரம்

 

ஒரே நாளில் 8 லட்சம் பரிசோதனைகள்: இந்தியாவில் கொரோனா நிலவரம்

உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்தியா உலகளவில் அதிகப் பாதிப்புள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆனால், கடந்த ஒரு வாரமாக தினந்தோறும் அதிகரிக்கும் புதிய நோயாளிகளின் பட்டியலில் இந்தியாவே முதல் இடத்தில் இருக்கிறது. இது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும்.

கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டறிந்து, பதிவு செய்துவிட்டது. ஆனால், அது மக்களின் பயன்பாட்டிற்கு வர இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகும் என்றே தெரிகிறது.

ஒரே நாளில் 8 லட்சம் பரிசோதனைகள்: இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்நிலையில் பரிசோதனைகளை அதிகப்படுத்துவதும் நோயாளிகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதுமே நம்மிடம் இருக்கும் வாய்ப்புகள்.

எனவே இந்தியா பரிசோதனைகளை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட 8,30,391 சோதனைகள் நடத்தியுள்ளது.

பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை” என்கிற திட்டத்தைப் பின்பற்றி, ஒரு நாளைக்கு 10 லட்சம் சோதனைகள் செய்யும் திறனை எட்டுவதற்கு இந்தியா தயாராக உள்ளது.

ஒரே நாளில் 8 லட்சம் பரிசோதனைகள்: இந்தியாவில் கொரோனா நிலவரம்

கோவிட் – 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்காக்  இந்தியா ஒரு நாளைக்கு மேற்கொள்ளப்படும் சோதனைகளின் எண்ணிக்கையை விரைவாக அதிகரித்துள்ளது.

வாரா வாரம் சராசரியாக தினசரி சோதனைகள் 2020 ஜூலை முதல் வாரத்தில் சுமார் 2.3 லட்சத்திலிருந்து தற்போதைய வாரத்தில் 6.3 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 8 லட்சத்துக்கும் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய  நிலவரப்படி ஒட்டுமொத்த சோதனை 2,68,45,688 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு மில்லியனுக்கான டெஸ்ட் 19453 ஆக அதிகரித்துள்ளது.