“எனக்கு கொரோனா பணி தான் முக்கியம்” – மருத்துவமனை டீன்களை மாற்றி முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

“எனக்கு கொரோனா பணி தான் முக்கியம்” – மருத்துவமனை டீன்களை மாற்றி முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 159 இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலே அதிகார மட்டத்திலும் மாற்றம் இருக்கும். அது தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வகையில் உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை தனி செயலராக ஸ்டாலின் நியமித்தார். தலைமைச் செயலராக இறையன்பு நியமிக்கப்பட்டார்.

“எனக்கு கொரோனா பணி தான் முக்கியம்” – மருத்துவமனை டீன்களை மாற்றி முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

கொரோனா காலம் என்பதால் அதை ஒழித்துவிட்டு தான் அடுத்த வேலைகள் என்ற நோக்கத்துடன் ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல அதிரடி மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கிறார். தற்போது கீழ்ப்பாக்கம், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களை மாற்றி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

“எனக்கு கொரோனா பணி தான் முக்கியம்” – மருத்துவமனை டீன்களை மாற்றி முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

மாற்றப்பட்டவர்கள் விவரம் பின்வருமாறு:

1.மருத்துவக் கல்வி இயக்குநரகத் தேர்வுக்குழு செயலராகப் பதவி வகிக்கும் சாந்திமலர் மாற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2.கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த வசந்தாமணி மாற்றப்பட்டு, மருத்துவக்கல்வி இயக்குநரகத் தேர்வுக்குழுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3.மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி மாற்றப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

“எனக்கு கொரோனா பணி தான் முக்கியம்” – மருத்துவமனை டீன்களை மாற்றி முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

4.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மாற்றப்பட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5.சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் மாற்றப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி

“எனக்கு கொரோனா பணி தான் முக்கியம்” – மருத்துவமனை டீன்களை மாற்றி முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

6.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7.கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி மாற்றப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8.விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி மாற்றப்பட்டு, கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.