தலித் மாணவர் காலில் விழ வைத்து அவமதிப்பு… 8 பேர் கைது!

 

தலித் மாணவர் காலில் விழ வைத்து அவமதிப்பு… 8 பேர் கைது!

நாகை

வேதாரண்யம் அருகே காடுவெட்டி குரு குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தலித் மாணவர் காலில் விழ வைத்தது தொடர்பாக 8 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வண்டல் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (17). தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ரஞ்சித் ரஞ்சித் பேஸ்புக்கில் காடுவெட்டி குரு குறித்து வந்த பதிவு ஒன்றை, தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் 30 பேர், மாணவர் ரஞ்சித்தை அச்சுறுத்தி காடுவெட்டி குருவின் படம் ஒட்டப்பட்ட பதாகையின் முன்பு காலில் விழுந்து மண்ணிப்பு கேட்கும் படி செய்துள்ளனர்.

தலித் மாணவர் காலில் விழ வைத்து அவமதிப்பு… 8 பேர் கைது!

மேலும், இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவரை அவமதித்த நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வண்டல் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.