ஈரோட்டில் இதுவரை 8.82 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!

 

ஈரோட்டில் இதுவரை 8.82 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 82 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்தபோது, பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்தது. இதன்படி, மாவட்டத்தில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு நோயின் தன்மைக்கேற்ப வீடுகளிலோ, மருத்துவமனைகளிலோ வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் நோய் தொற்றிலிருந்து மக்கள் விரைவாக குணமடைந்தனர்.

பின்னர், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதை அடுத்து, தினசரி பரிசோதனையும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால், மீண்டும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு, தற்போது நாள்தோறும் 9,500 முதல் 10 ஆயிரம் வரை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இது தவிர ஒரு சில தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் இதுவரை 8.82 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!

ஈரோடு மாநகர் பகுதியில் தற்போது நாள்தோறும் 1,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதன்படி, முதலில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனை தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், தற்போது மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்கள் அடிப்படையில் அந்தந்த தேர்தல் நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கி, அதன் அடிப்படையில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை 8 லட்சத்து 82 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக, மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.