8.5 கிலோ தங்கம் கடத்தல்: திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய கும்பல்!

8.5 கிலோ தங்கம் கடத்தல்: திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய கும்பல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட சர்வதேச விமான போக்குவரத்து தடை தற்போது வரை நீடிக்கிறது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாக பிற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படாமல் இருக்கும் சூழலில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

8.5 கிலோ தங்கம் கடத்தல்: திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய கும்பல்!

அந்த வகையில் நேற்று திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து அடுத்தடுத்து 2 விமானங்கள் வந்தடைந்தன. அதில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது சென்னை, கோழிக்கோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 6 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது.

8.5 கிலோ தங்கம் கடத்தல்: திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய கும்பல்!

அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், பேஸ்ட் வடிவில் கடத்தப்பட்டு வந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த 8.5 கிலோ தங்கத்தின் மதிப்பு ரூ.4.25 கோடி இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 10 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றன.