8.42 லட்சம் வாகனங்கள் விற்பனை….. ரூ.255 கோடி லாபம்……கலக்கும் டி.வி.எஸ்.

 

8.42 லட்சம் வாகனங்கள் விற்பனை….. ரூ.255 கோடி லாபம்……கலக்கும் டி.வி.எஸ்.

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.255 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 21 சதவீதம் அதிகமாகும்.

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை அறவித்து வருகின்றன. பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி  நேற்று தனது கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. கடந்த காலாண்டில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் நிகர லாபம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது.

டி.வி.எஸ். ஆலை

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனிக்கு கடந்த செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.255 கோடி கிடைத்துள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் அந்த நிறுவனம் நிகர லாபமாக ரூ.211.30 கோடி ஈட்டியிருந்தது. ஆக, கடந்த காலாண்டில் டி.வி.எஸ். நிறுவனத்துக்கு லாபம் 21 சதவீதம் அதிகமாக கிடைத்துள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் டி.வி.எஸ்.மோட்டார் கம்பெனியின் மொத்த வருவாய் ரூ.4,352.70 கோடியாக குறைந்துள்ளது.

வருவாய்

இந்நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ள போதிலும் விற்பனை கொஞ்சம் சரிவு கண்டுள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் டி.வி.எஸ். நிறுவனம் 8.42 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை (ஏற்றுமதி உள்பட) செய்துள்ளது. 2018 செப்டம்பர் காலாண்டில் அந்த நிறுவனம் 10.49 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.