குடியிருப்பு கட்டிடம் இடிந்து 8 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு

 

குடியிருப்பு கட்டிடம் இடிந்து 8 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு

மும்பையில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று கனமழையினால் இடிந்து விழுந்ததால் 8 குழந்தைகள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குடியிருப்பு கட்டிடம் இடிந்து 8 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு

மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை நேற்று பெய்ய தொடங்கி இருக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.

மும்பை மாலட் மேற்கு பகுதியில் இருந்த இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் நேற்று இரவு 11.10 மணி அளவில் கனமழையினால் இடிந்து விழுந்தது. இரண்டு மாடிகட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர் என்பது தெரியவந்தது. இதன்பின்னர் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணியின்போது மேலும் 2 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருக்கிறது.

மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கின்றனர் அதிகாரிகள். அதனால், மீட்பு பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.