8 வழி சாலை அராஜகம்!  ஆம்புலன்ஸ் போகவும் வழி இல்லை!

8 வழி சாலை அராஜகம்!  ஆம்புலன்ஸ் போகவும் வழி இல்லை!

சேலம் 8 வழி சாலையைப் பற்றி பேச்செடுத்தாலே கொந்தளிக்கிறார்கள் சேலம் நெடுஞ்சாலையில் உள்ள வேப்பூர் கிராம மக்கள். விருத்தாசலம் – சேலம் நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளடங்கி அமைந்திருக்கிறது தே.புடையூர் கிராமம். இந்த கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். நெடுஞ்சாலையிலிருந்து இந்தக் கிராமத்துக்குச் செல்லும் சாலை, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்த சாலையின் லட்சணம் இதுவாக தான் இருக்கிறது. ‘இப்போ ஆட்சியில் இருப்பவங்களுக்கு முன்னாடி, இவங்களோட இதய தெய்வம் அம்மா ஆட்சியில் இருந்தாங்களே… அதுக்கு முன்னாடி கலைஞர் இருந்தப்போ போட்ட ரோடு. அதுக்கப்புறமா யாருமே இந்த பக்கம் வரலை… பஞ்சாயத்து தலைவர்கள் வோட்டு கேட்க வந்தாங்க… அப்புறமா அவங்களும் வேலை முடிஞ்சிடுச்சுன்னு இந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கலை… நெடுஞ்சாலையில சர்ர்ரு…புர்ர்ருன்னு.. கார்ல பறக்கறவங்க மட்டும் தான் தமிழ்நாட்டு ஜனங்கன்னு பணத்தை இறைச்சு 8 வழி சாலையைப் போட்டே தீருவேன்னு அடம்பிடிக்குற மனுஷங்க… முதல்லா.. இருக்கிற ரோடுகளை ஒழுங்கா போட்டா புண்ணியமா போகும். நாங்களும் மனுஷங்க தானே?’ என்று விரக்தியாய் பேசுகிறார்கள் ஊர் மக்கள்.

இந்த சாலையை சீரமைக்கக் கோரி, நெடுஞ்சாலைத் துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்து ஓய்ந்து போய் விட்டதாகக் கூறும் இக்கிராம மக்கள், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையையுமே எடுக்கவில்லை. குறைந்த பட்சமாக இப்படி ரோடு இருக்கிறது என்கிற அவல நிலையைக் கூட எங்குமே பதிவாக செய்யவில்லை’ என்கின்றனர். சாலை இப்படி குதறி போட்டபடி இருக்கிறதால, அவசரத்துக்கு, ஆபத்து கால உதவிக்குன்னு இந்த ஊருக்குள்ள ஆம்புலன்ஸ் கூட வரத் தயங்குது. அப்படியும் அடம் பிடிச்சு, கெஞ்சி கூத்தாடி ஆம்புலன்ஸை அழைச்சாலும், மெயின் ரோட்டிலிருந்து ஊருக்குள்ள இந்த சாலையில் வர்றதுக்கு அரை மணி நேரத்துக்கு மேல ஆகுது என்று அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். பிரதான சாலையை அடைய இந்த மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை ஓரிரு ஷேர் ஆட்டோக்கள் மட்டுமே. ஒரே ஒரு அரசுப் பேருந்து நாளொன்றுக்கு மூன்று முறை இக்கிராமத்துக்குள் வந்து செல்கிறது. அதுவும் பல நேரங்களில் வருவது இல்லை என்று கூறும் கிராம மக்கள், இதனால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பிள்ளைகள் பெரும் அவதிக்கு உள்ளாவதாகக் கூறுகின்றனர். சட்டசபை தேர்தலுக்குள்ளவாவது ரோடு போடுவாங்களா என்று அப்பாவியாக கேட்கிறார் ஊர் பெரியவர் ஒருவர்.