8 வயது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட மனிதநேயம் ! இஸ்லாமிய இளைஞருக்கு குவியும் பாராட்டு !!

 

8 வயது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட மனிதநேயம் ! இஸ்லாமிய இளைஞருக்கு குவியும் பாராட்டு !!

கொரோனா பாதிப்புக் காரணமாக உலக மக்கள் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு பல உள்ளங்கள் உதவி செய்து மனிதநேயம் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இதற்கிடையே உதவி செய்வதில் எல்லாவற்றிற்கும் மேலாக ஜார்கண்ட் மாநிலம் கிரிடிஹ் மாவட்டத்தில் உள்ள பாகோடர் தொகுதியில் வசிக்கிறார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர், உயிருக்குப் போராடும் 8 வயது குழந்தைக்கு ரத்த தானம் செய்வதற்காக ரமலான் நோன்பை கைவிட்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். 
கொரோனா பாதிப்புக் காரணமாக உலக மக்கள் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு பல உள்ளங்கள் உதவி செய்து மனிதநேயம் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இதற்கிடையே உதவி செய்வதில் எல்லாவற்றிற்கும் மேலாக ஜார்கண்ட் மாநிலம் கிரிடிஹ் மாவட்டத்தில் உள்ள பாகோடர் தொகுதியில் வசிக்கிறார். சலீம் அன்சாரி, ஒரு உயிரை காப்பாற்ற ரத்த தானமே செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்தி உள்ளார். 
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 8 வயது குழந்தை நிகில் நிமோனியா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அந்த குழந்தைக்கு அடிக்கடி A+ வகை ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் அவ்வளவு எளிதில் அந்த குழந்தைக்கு ரத்தம் கிடைப்பதில்லை. 

a positive

இந்நிலையில் குழந்தைக்கு நோய் பாதிப்பு அதிகரித்ததால் உடனே ரத்தம் தேவைப்பட்டது. இதனால் பெற்றோர் அச்சம் அடைந்தனர். இந்த தகவலை தங்கள் கிராமத்தில் மக்களுக்கு தெரிவித்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இஸ்லாமிய இளைஞர் சலீம் அன்சாரி அந்த குழந்தைக்கு ரத்த தானம் செய்ய விரும்பினார். ஆனால் அவர் இருக்கும் மாவட்டமும், குழந்தை மருத்துவமனையில் இருக்கும் மாவட்டமும் வேறு வேறு. இதனால் ஊரடங்கு காரணமாக எல்லையை கடக்க முடியவில்லை. பின்னர் பல தடைகளை கடந்து சென்ற சலீம் அன்சாரி ஒரு இறைதூதர் போல் சென்று அந்த குழந்தைக்கு ரத்த தானம் செய்து உயிரைக் காப்பாற்றினார். இதனால் தான் மேற்கொண்டிருந்த ரமலான் நோன்பையும் அவர் கைவிட்டார்.
ஒரு உயிரைக் காப்பற்ற ரமலான் நோன்பையே கைவிட்ட இஸ்லாமிய இளைஞரும் ஒரு இறைதூதரே என்று கிராம மக்கள் பாராட்டினர்.