8 ஜிபி ரேம், மூன்று ரியர் கேமரா செட்டப், இன்-டிஸ்ப்ளே சென்சார் கொண்ட ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

 

8 ஜிபி ரேம், மூன்று ரியர் கேமரா செட்டப், இன்-டிஸ்ப்ளே சென்சார் கொண்ட ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது ஹானர் மேஜிக் 2 ஆகும்.

பெய்ஜிங்: ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் புதிய  ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது ஹானர் மேஜிக் 2 ஆகும்.

சீன தலைநகரம் பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று ரியர் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார், 3D ஃபேஸ் அன்லாக், 40 வாட்ஸ் மேஜிக் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், 6.39 இன்ச் டிஸ்பிளே ஆகிய சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. 6 ஜிபி மற்றும் 8 ஜிபி என இருவகை ரேம்களில் ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஹானர் மேஜிக் 2 சிறப்பம்சங்கள்:

– 6.39 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்பிளே

– ஹூவாய் கிரின் 980 பிராசஸர்

– 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

– 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி

– ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம்

– 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8

– 24 எம்.பி. இரண்டாவது மோனோக்ரோம் சென்சார், f/1.8

– 16 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2, எல்.இ.டி. ஃபிளாஷ், AIS

– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/ 2.0

– 2 எம்.பி. + 2 எம்.பி. f / 2.4 கேமரா

– இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார்

– டூயல் சிம் ஸ்லாட், 3D ஃபேஸ் அன்லாக், வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

– 3500 எம்.ஏ.எச் பேட்டரி மற்றும் 40 வாட் சூப்பர் சார்ஜ் தொழில்நுட்பம்

ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் பிளாக், கிரேடியன்ட் ரெட் மற்றும் கிரேடியன்ட் புளு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம் மாடல் விலை 3799 சீன யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.40,295) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் – 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 4299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.45,610) என்றும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 4799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.50,910) என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று (நவம்பர் 1) முதல் முன்பதிவு செய்யப்படும் ஹானர் மேஜிக் 2 விற்பனை நவம்பர் 6-ஆம் தேதி தொடங்குகிறது.