8 ஜிபி ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் கேமிங் போன் இந்தியாவில் வெளியானது

 

8 ஜிபி ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் கேமிங் போன் இந்தியாவில் வெளியானது

நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் என்ற பெயரில் புதிய கேமிங் போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

டெல்லி: நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் என்ற பெயரில் புதிய கேமிங் போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் கேமிங் போனை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், தற்போது அந்த சாதனத்தை இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.0 இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 8 ஜிபி ரேம், ஏர்-கூல்டு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஸமார்ட்போனின் பின்புறம் மெட்டல் பாடியில் ஒன்பது ஏர் ஸ்லாட்கள் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் கேமிங் செய்யும் போது மொபைல் சூடாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் மும்மடங்கு அனோடைஸ் செய்யப்பட்ட ஏவியேஷன்-கிரேடு அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பிரத்யேக கேமிங் பட்டனை க்ளிக் செய்யும் போது, ஸ்மார்ட்போனின் பேக்கிரவுண்ட் நெட்வொர்க்கை குறைத்து, அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., நோட்டிஃபிகேஷன் உள்ளிட்டவற்றை பிளாக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

நுபியா ஸ்மார்ட்போனிற்கென 128 கேம்களை ஆப்டிமைஸ் செய்து, கேமின் லோடிங் வேகத்தை 50% வரை அதிகப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

நுபியா ரெட் மேஜிக் சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே

– 2.45 ஜிகாஹெர்ட்ஸ் 835 64-பிட் 10 என்.எம். பிராசஸர்

அட்ரினோ 540 GPU

– 8 ஜி.பி. ரேம்

– 128 ஜி.பி. மெமரி

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் நுபியா ரெட் மேஜிக் ஓ.எஸ்.

டூயல் சிம் ஸ்லாட்

– 24 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 6P லென்ஸ், டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்

– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

கைரேகை சென்சார்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், TAS2555 ஆம்ப்ளிஃபையர், டி.டி.எஸ். ஆடியோ

பிரத்யேக கேமிங் பட்டன்

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

– 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் நுபியா ரெட் மேஜிக் ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 20ம் தேதி முதல் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஸ்மார்ட்போனினை முதலில் வாங்கும் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரெட் மேஜிக் நெர்ட்ஸ் இயர்போன்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.