8 ஜிபி ரேம், இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் கொண்ட புதிய விவோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

 

8 ஜிபி ரேம், இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் கொண்ட புதிய விவோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனம் தனது முதல் கேமிங் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

பெய்ஜிங்: விவோ நிறுவனம் தனது முதல் கேமிங் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

விவோ நிறுவனம் தனது முதல் கேமிங் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அது விவோ iQOO ஸ்மார்ட்போன் ஆகும். இதில் அதிகபட்சமாக 8 ஜிபி ரேம் மற்றும் இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் அலுமினியம் அலாய் ஃபிரேம் கொண்டிருக்கிறது. பின்புறம் இரண்டு எலெக்ட்ரோ-ஆப்டிக் லைன்கள் வழங்கப்பட்டுள்ளது. 4D கேமிங் அனுபவத்தை வழங்க இரு பிரஷர் சென்சிட்டிவ் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் எலெக்ட்ரோ புளு மற்றும் லாவா ஆரஞ்சு ஆகிய இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம் வெர்ஷன் விலை 2998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.31,740) என்றும், 8 ஜிபி ரேம் வெர்ஷன் விலை 3298 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,910) என்றும், 9 ஜிபி ரேம் வெர்ஷன் விலை 3598 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.38,090) என்றும், 12 ஜிபி ரேம் வெர்ஷன் விலை 4298 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.45,500) என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவோ iQOO ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் ஃபுல் ஹெச்.டி சூப்பர் AMOLED டிஸ்பிளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 9 இயங்குதளம், 12 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363, f/1.79, 13 எம்.பி 120-டிகிரி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 2 எம்.பி கேமரா, 12 எம்.பி செல்ஃபி கேமரா, இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி டைப்-சி, 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 44 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.