8 ஜிபி டேட்டா இலவசம்…மீண்டும் ரிலையன்ஸ் ஜியோ அதிரடி சலுகை

 

8 ஜிபி டேட்டா இலவசம்…மீண்டும் ரிலையன்ஸ் ஜியோ அதிரடி சலுகை

ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 8 ஜிபி இலவச டேட்டா வழங்குகிறது.

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 8 ஜிபி இலவச டேட்டா வழங்குகிறது.

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன்னுடைய டெலிகாம் சேவையை தொடங்கி கடந்த செப்டம்பர் மாதத்தோடு இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றது. இதனை கொண்டாடும் வகையில், ஜியோ செலபிரேஷன்ஸ் ஆஃபர் என்ற பெயரில் பயனர்களுக்கு இலவச சேவைகளை அந்நிறுவனம் வழங்கியது. இதனால் பயனர்களுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கூடுதலாக 8 ஜிபி டேட்டாவை ஜியோ நிறுவனம்  இலவசமாக வழங்கியது.

அதன்படி தற்போது ஜியோ நிறுவனம் தன்னுடைய பிரீபெயிட் பயனர்களுக்கு 8 ஜிபி இலவச டேட்டாவை வழங்கி வருகிறது. ஜியோ வழங்கி இருக்கும் 8 ஜிபி கூடுதல் டேட்டா நான்கு நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இதன் மூலம் பிரீபெயிட் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோ வழங்கும் இலவச டேட்டா, பிரீபெயிட் பயனர்கள் கணக்கில் தானாக சேர்க்கப்படுகிறது.

jio

இந்த சலுகையை பிரீபெயிட் பயனர்கள் தங்களது மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் ஆப்ஷனில் பார்க்க முடியும். ஜியோ பிரீபெயிட் பயனர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அனைத்து பிரீபெயிட் பயனர்களுக்கும் இலவச டேட்டா கிரெடிட் ஆக சில காலம் ஆகும் என தெரிகிறது.