8 எம்.பி செல்பி கேமரா கொண்ட நோக்கியா 7.1 மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

8 எம்.பி செல்பி கேமரா கொண்ட நோக்கியா 7.1 மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் நோக்கியா 7.1 மிட்-ரேன்ஜ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் நோக்கியா 7.1 மிட்-ரேன்ஜ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. முதன்முறையாக கடந்த மாதம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முக்கிய சிறப்பம்சங்களாக 5.84 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 12 எம்.பி + 5 எம்.பி டூயல் பிரைமரி கேமரா, 8 எம்.பி செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 7.1 சிறப்பம்சங்கள்:

– 5.84 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 அம்சம்

– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

– 4 ஜிபி ரேம்

– 64 ஜிபி மெமரி

– மெமரியை நீட்டிக்கும் வசதி

– ஹைப்ரிட் டூயல் சிம்

– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

– 12 எம்.பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்

– 5 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா

– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 84-டிகிரி FOV

– விரல்ரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்

– 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ, நோக்கியா OZO ஆடியோ

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், டைப்-சி

– 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் கிளாஸ் மிட்நைட் புளு மற்றும் கிளாஸ் ஸ்டீல் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 7-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு 1000 4 ஜி.பி. 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதை பெற பயனர்கள் ரூ.199 விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 120 ஜி.பி. கூடுதல் டேட்டா, மூன்று மாதங்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் சந்தா, ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இத்துடன் நோக்கியா 7.1 மாத தவணையில் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பைன்லேப் மூலம் பணம் செலுத்தும் போது 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.