8 இன்ச் டிஸ்பிளே கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்

 

8 இன்ச் டிஸ்பிளே கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது புதிய மாடல் டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 ஆகும். இந்த புதிய டேப்லெட் MIL-STD-810 தரச்சான்று பெற்றிருக்கிறது. இதில் 1.2 எம் ஆண்டி-ஷாக் இன்பாக்ஸ் ப்ரோடெக்டிவ் கவர், IP68 தரம் கொண்ட வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் நாக்ஸ் (Knox) பாதுகாப்பு தளம் மூலம் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். மேலும் இதில் விரல்ரேகை சென்சார் மற்றும் பயோமெட்ரிக் ஆத்தென்டிகேஷன் வசதி ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. கருப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை ரூ.50,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சிறப்பம்சங்களை பொறுத்தவரை 8.0 இன்ச் டிஸ்பிளே, ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 7870 பிராசஸர், 3 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளம், 8 எம்.பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி செல்ஃபி கேமரா, எஸ் பென், 4ஜி எல்.டி.இ., வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 4450 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.