8 இந்திய மொழிகளுடன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ‘ஜியோ பிரவுசர்’ கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகம்!

 

8  இந்திய மொழிகளுடன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ‘ஜியோ பிரவுசர்’ கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகம்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் ஜியோ பிரவுசரை அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் ஜியோ பிரவுசரை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ‘ஜியோ பிரவுசர்’ என்ற புதிய ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்துள்ளது. இது சுமார் 3 எம்.பி அளவில் காணப்படுகிறது. இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளை கடந்துள்ளது. ‘ஃபாஸ்ட் அன்ட் லைட்’ (Fast and Lite) என்ற டேக்லைனுடன் அறிமுகமாகி உள்ள இந்த பிரவுசர் தமிழ், பெங்காலி, இந்தி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய 8 மொழிகளை ஆதரிக்கிறது. இதில் இன்காக்னிட்டோ மோடு மற்றும் செய்திகள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்யும் வசதியும் இடம்பெற்றுள்ளது.

இந்த செயலியை ஆங்கிலத்தில் இருந்து பிராந்திய மொழிகளுக்கு மாற்றும் போது, செயலியின் வடிவமைப்பு மட்டுமின்றி செய்தி உள்ளடக்கங்களின் மொழியும் மாற்றப்படுகிறது. மேலும் குகூள், ஃபேஸ்புக் என அனைத்து தளங்களையும் நமக்கு விருப்பமுடைய மொழிகளில் பார்க்கும் வசதியும் இதில் உண்டு. ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்பில் இயங்கும் இந்த பிரவுஸரை இதுவரை பயன்படுத்திய பயனர்கள் சராசரியாக 4.4 ரேட்டிங் கொடுத்துள்ளனர். ஆனால் இன்னும் சில முக்கிய மேம்பாடுகளை இதில் செய்ய வேண்டியிருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.