8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 12ல் திறக்கப்படும் மேட்டூர் அணை! – விவசாயிகள் மகிழ்ச்சி

 

8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 12ல் திறக்கப்படும் மேட்டூர் அணை! – விவசாயிகள் மகிழ்ச்சி

ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் ஜூன் 12ம் தேதி திறக்க முடியாமல் தமிழக அரசு அவதியுற்று வந்தது

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மேட்டூர் அணை விவசாயத்துக்காக ஜூன் 12ம் தேதி திறக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் ஜூன் 12ம் தேதி திறக்க முடியாமல் தமிழக அரசு அவதியுற்று வந்தது. அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தாலும் மழைப் பொழிவு, தென்மேற்கு பருவமழை தொடக்கம் உள்ளிட்டவற்றை கணித்தே தண்ணீர் திறப்பது வழக்கமாக மாறியது. 

mettur-dam-7

தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் 100.01 அடி உள்ளது. நீர் இருப்பு, 64.85 டி.எம்.சி-யாக உள்ளது. இந்த தண்ணீரைக் கொண்டு 50 நாட்களுக்கு பாசனம் செய்யலாம். இதற்குள்ளாக கர்நாடகாவில் காவிரி உற்பத்தியாகும் இடத்தில் மழை பொழிவு தொடங்கிவிட்டால் அணைக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும். இதனால், எந்த பிரச்னையும் இன்றி விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கலாம். எனவே, ஜூன் 12ம் தேதி அணையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் இதை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவிரியில் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், டெல்டா பகுதிகளில் 12 மணி நேரம் தடையில்லா மின்சாரம், பாசன வாய்க்கால் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சரியான நாளில் மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு நல்ல முறையில் விவசாயம் செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு 5.6 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு அரிசி மகசூல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.