8 நாளில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லையா? சட்டத்தை உங்க கையில் எடுங்கள்.. நிதின் கட்கரி அதிரடி பேச்சு…

8 நாட்களுக்குள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் சட்டத்தை உங்கள் கையில் எடுங்கள் என மக்களிடம் சொல்வேன் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

நாக்பூரில் நேற்று குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த லகு உத்யோக் பாரதி அமைப்பு கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்த கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து, குறு, சிறு மற்றும் நடுத்த நிறுவனங்கள் துறைகளின் அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் நிதின் கட்கரி பேசுகையில் கூறியதாவது:

குறு,சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகம்

தொழில்முனைவோர் எந்தவித பயமும் இன்றி தங்களது வர்த்தகத்தை விரிவுப்படுத்த வேண்டும். தொழில்முனைவோரை ஊக்குவிப்பது அரசின் பணி. அது இல்லையென்றால் நமக்கு 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் சாத்தியம் இல்லை. மேலும், தொழில்முனைவோருக்கு சில அரசு அதிகாரிகள் தொந்தரவு கொடுப்பது குறித்து பேசுகையில், ஏன் இவ்வளவு முட்டு கட்டைகள், ஏன் அனைத்து கண்காணிப்ப்பாளர்களும் வருகிறார்கள். அவர்கள் லஞ்சம் வாங்க வருகிறார்கள். அவர்களின் முகத்தை பார்த்து சொல்கிறேன், நீங்கள் (அரசு) வேலையாள். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். நான் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நீங்கள் திருட்டில் ஈடுபட்டால் நான் உங்களை திருடன் என்று சொல்வேன்.

நிதின் கட்கரி

இன்று ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒரு சந்திப்பை நடத்தினேன். அதில் போக்குவரத்து ஆணையர்கள் கலந்து கொண்டனர். பிரச்சினைகளை எட்டு நாட்களுக்குள் தீர்வு காணுங்கள். இல்லையென்றால் சட்டத்தை உங்கள் கையில் எடுங்கள் அவற்றை நொறுக்குங்கள் என்று மக்களிடம் கூறிவிடுவேன் என அவர்களிடம் எச்சரிக்கை செய்தேன். நீதி வழங்காத அமைப்பை தூக்கி எறியுங்கள் என எனது ஆசிரியர்  சொல்லி கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

அதேசமயம், எந்த பிரச்சினையை குறிப்பிட்டு இதனை பேசினார் என்பதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  விரிவாக சொல்லவில்லை.

 

Most Popular

அக்டோபர் மாதம் வரை கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கியை குறைக்க வாய்ப்பில்லை… அடிச்சு சொல்லும் நிபுணர்கள்

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதம் குறித்து முடிவு செய்யப்படும். இதனால் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை...

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை கொண்டாடிய தெலங்கானா பஜ்ரங் தளம்….

ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் பிரதமர் நரேந்திரா மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் நேற்று தெலங்கானாவில் பஜ்ரங் தளம் அமைப்பினர் ராமர் கோயில்...

விஜய் மல்லையா வழக்கை விசாரித்த அதே சி.பி.ஐ. குழு நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை விசாரிக்கிறது

பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று, பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்கும் என நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதனையடுத்து சி.பி.ஐ. இந்த வழக்கை...

சைபுதீன் சோஸை கைதி போல் அரசு நடத்துகிறது.. நம் நாடு ஜனநாயக குடியரசு நினைவில் வைச்சுகோங்க.. பிரியங்கா

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சைபுதீன் சோஸ். அவரை வீட்டுக்காவலிலிருந்து விடுதலை செய்ய காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி அவரது மனைவி...