8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த ஐடி பெண் ஊழியர்: வழக்கில் திடீர் திருப்பம்!?

 

8வது மாடியில் இருந்து விழுந்து  உயிரிழந்த ஐடி பெண் ஊழியர்: வழக்கில் திடீர் திருப்பம்!?

சற்று உடல் பருமனாக இருக்கும் ஜூலியஸ், மாரத்தான் ஓட்டம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவார்

சென்னை: பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே பெண் ஐடி ஊழியர்  மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த டெனிதா ஜீலியஸ். இவர் சென்னை அம்பத்தூர் உள்ள ஐடி நிறுவனத்தில் தேர்வாகி நேற்று முன்தினம்  பணியில் சேர்ந்தார். முதல் நாளே இரவு பணியிலிருந்த அவர்  நிறுவனத்தின் 8வது மாடியிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டெனிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார்,  திருச்சியில் உள்ள டெனிதா ஜீலியஸின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

jenitha

இதையடுத்து திருச்சியிலிருந்து டெனிடா ஜூலியஸ் பெற்றோர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு நேற்று காலை வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சற்று உடல் பருமனாக இருக்கும் ஜூலியஸ், மாரத்தான் ஓட்டம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவார் என்றும் பொதுவாகவே எந்த இடத்திற்குப் போனாலும் லிப்ட்டை  பயன்படுத்தாமல், படிக்கட்டு வழியாக செல்வது வழக்கமாம். அதன்படி, ஜூலியஸ் பணிமுடிந்து 8 வது மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் போது  நிலைதடுமாறி விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

it

இருப்பினும்ஜூலியஸ்  தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.