8ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு இல்லை… தொடக்கக் கல்வி இயக்குநரகம் பல்டி!

 

8ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு இல்லை… தொடக்கக் கல்வி இயக்குநரகம் பல்டி!

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் சிறப்பு வகுப்புகள், தேர்வுகள் நடத்த வேண்டும் என்று ஈரோடு மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

 

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் சிறப்பு வகுப்புகள், தேர்வுகள் நடத்த வேண்டும் என்று ஈரோடு மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதனால், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு அரசு தேர்வு என்ற அறிவிப்பால் மாணவர்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் திங்கள் முதல் வெள்ளி வரை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்த வேண்டும் என்ற அறிவிப்பு அவர்களை மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாக்குவதாகக் கல்வியாளர்கள், மனநல மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் கூறினர்.

dpi

இந்த நிலையில், இந்த “தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு இல்லை” என்று தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுத் தேர்வு என்று இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் செய்தி வெளியானது. அதன்பிறகு தேர்வு கிடையாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பிறகு மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு என்றார். பிறகு தேர்வு நடக்கும் என்றார். இப்படி மாணவர்கள் வாழ்க்கை விவகாரத்தில் அரசு எடுத்தோம் கவிழ்த்தோம் போக்கில் செயல்பட்டு வருவது நல்லது இல்லை என்று பெற்றோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.