8ம் வகுப்பு படித்துக்கொண்டு 10வது தேர்வு எழுதும் மாணவர்! – தந்தையின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

 

8ம் வகுப்பு படித்துக்கொண்டு 10வது தேர்வு எழுதும் மாணவர்! – தந்தையின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

அஸ்ஸாமில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தையின் பல்வேறு கோரிக்கை, போராட்டத்துக்குப் பிறகு சிறுவனுக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐசக் பாலலுங்கான் வைஃபே. 12 வயதான இந்த சிறுவன் தற்போது 8ம் வகுப்பு படித்து வருகிறான்.

அஸ்ஸாமில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தையின் பல்வேறு கோரிக்கை, போராட்டத்துக்குப் பிறகு சிறுவனுக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐசக் பாலலுங்கான் வைஃபே. 12 வயதான இந்த சிறுவன் தற்போது 8ம் வகுப்பு படித்து வருகிறான். புத்திக்கூர்மை அதிகம் உள்ள இந்த மாணவன் எப்போதோ எட்டாம் வகுப்பு பாடங்களை எல்லாம் படித்து முடித்துவிட்டான். ஒன்பது, 10ம் வகுப்பு பாடங்களை எல்லாம் முடித்து எப்போது தேர்வு வைத்தாலும் சந்திக்க தயார் என்ற நிலையில் உள்ளான்.

assamboy

சிறுவனின் புத்திக்கூர்மையைக் கண்ட அவனது அப்பா செங்கோலியன், ஐசக் ஏழாவது படிக்கும்போதே  நேரடியாக 10ம் வகுப்பு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அஸ்ஸாம் மாநில கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்தார். விதிமுறைப்படி இப்படி அனுமதிக்க முடியாது என்பதால் முதலில் அஸ்ஸாம் மாநில கல்வித் துறை மறுத்துள்ளது.
விடா முயற்சியாக, மாணவனின் அறிவுக்கூர்மைக்கான ஆதாரங்களோ கல்வித் துறை கதவைத் தட்டியுள்ளார் செங்கோலியன். இதனால், அவனது ஐ.க்யூ-வை பரிசோதிக்க கல்வித் துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். இதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த பரிசோதனையின் சிறுவன் ஐசக் 141 புள்ளிகளைப் பெற்றுள்ளான். இது அதீத புத்திசாலித்தனத்தின் சான்றாகும்.

iq

இந்த அறிவுத் திறனுக்கான வயது பற்றியும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயது சிறுவன் ஐசக், 17 வயது இளைஞர்களுக்கு உரிய அறிவு திறனோடு இருந்ததைக் கண்டறிந்தனர். இதனால், நிச்சயம் ஐசக்கால் அஸ்ஸாமுக்கு புகழும் மரியாதையும் கிடைக்கும் என்று அவனை 10ம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதித்துள்ளனர்.
இது குறித்து சிறுவன் ஐசக் கூறுகையில், “அஸ்ஸாமிலேயே முதன்முறையாக 10ம் வகுப்புத் தேர்வு எழுதும் இளம் மாணவனாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய பெயரையே எனக்கும் வைத்துள்ளதால் அது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. அதிகம் படிக்க எனக்கு அவர்தான் உந்துசக்தியாக உள்ளார்” என்றார்.