சென்னை நெற்குன்றத்தில் 23 வயது இளைஞர் நாராயணன் 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். தந்தையின் கண் முன்னே மகனுக்கு நடந்த இந்த சம்பவத்தை கண்டு நெற்குன்றம் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனஞ்ஜெயன் என்பவர்தான் முன் விரோதம் காரணமாக கும்பலாக வந்து நாராயணனை வெட்டிக்கொன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோயம்பேடு போலீசார் தப்பியோடிய 7 பேரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.