கொளத்தூர்: 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலை

 

கொளத்தூர்: 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலை

ஆசியாவிலேயே பெரிய தொகுதியாக இருந்த வில்லிவாக்கம் தொகுதி 2016ம் ஆண்டுக்கு பின்னர் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. இதனால் வில்லிவாக்கம், அம்பத்தூர், கொளத்தூர், திரு.வி.நகர். என்று நான்கு தொகுதிகளாக பிரிக்கப்பட்டது வில்லிவாக்கம் தொகுதி.

கொளத்தூர்: 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலை

2011ல் முதல் தேர்தலை சந்தித்தது கொளத்தூர் தொகுதி. முதல் தேர்தலிலேயே இது விஐபி தொகுதி ஆனது. 2011ல் நடந்த முதல் தேர்தலில் இருந்து மு.க.ஸ்டாலின் இத்தொகுதியை தன் வசமாக வைத்திருக்கிறார். 2011 தேர்தலில் திமுக வேட்பாளர் ஸ்டாலின் 68784 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 65965 வாக்குகள் பெற்று சைதை துரைசாமி வெற்றி வாய்ப்பினை இழந்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்கிய ஸ்டாலின் 91303 வாக்குகள் பெற்று மீண்டும் வென்றார். 53573 வாக்குகள் பெற்று ஜே.சி.டி. பிரபாகர் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.

கொளத்தூர்: 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலை

2021 சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் திமுக வேட்பாளராக,இந்த திமுகவின் முதல்வர் வேட்பாளர் என்ற கூடுதல் தகுதியுடன் களமிறங்கினார். அதிமுக வேட்பாளராக ஆதி ராஜாராம் களமிறங்கினார். அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மநீம சார்பில் ஏ.ஜெகதீஸ், நாதக சார்பில் பெ.கெமில்ஸ் செல்வா ஆகியோரும் களத்தில் இருந்தனர்.

இத்தேர்தலில், இன்று வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி 12, 664 வாக்குகள் பெற்று 6,592 வாக்குகள் பெற்று ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். அதிமுக ஆதி ராஜாராம் 6, 072 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். மநீம ஏ.ஜெகதீஸ் 2,011 வாக்குகள் பெற்றுள்ளார். நாதக பெ.கெமில்ஸ் செல்வா 1627 வாக்குகளூம், அமமுக ஜெ.ஆறுமுகம் 141 வாக்குகளும் பெற்றுள்ளனர்.