Home அரசியல் ராமதாஸ் பதிலுக்காக 7 நாட்களாக காத்திருக்கும் திமுக!

ராமதாஸ் பதிலுக்காக 7 நாட்களாக காத்திருக்கும் திமுக!

மீண்டும் அதிமுக கூட்டணிதான் என்பதை பாமக உறுதி செய்துவிட்டதாக செய்திகள் வரும் நிலையில், பாமகவின் வருகையை எதிர்பார்த்திருந்த திமுக பாமக மீது தொடர்ந்து ஆத்திரத்தை அள்ளிக்கொட்டி வருகிறது.

கடந்த வாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு வன்னியர் சமுதாயத்தை சேந்த ஒருவர் எழுதுவதுபோல், முரசொலியில் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அதில், 6 கேள்விகள் கேட்டு, அந்த கேள்விகளுக்கு பதில் வேண்டும் என்று எதிர்பார்ப்பதுபோல, ‘பாசத்துடன் காத்திருக்கும் பாட்டாளி சொந்தம்’ என்று கீழே குறிப்பிடப்பட்டிருந்தது.

ராமதாஸ்

தேர்தல் வருவதற்கு முன்பாக சீட் ஒதுக்கீடு போன்ற பல பேரங்களுக்காக ஒரு பெரும் சமுதாயத்தை நீங்கள் அடகு வைக்கிறீர்கள். உங்களை வளப்படுத்திக்கொள்கிறீர்கள். சமுதாயத்தை நட்டாற்றில் விட்டுவிடுகிறீர்கள். அதனால்தான் நம்மவர்கள் பலர் உங்களை விட்டு விலக தொடங்கியுள்ளனர் என்று சொல்லிவிட்டு, 20 சதவிகித ஒதுக்கீட்டில் எத்தனை சதவிகித உள் ஒதுக்கீடு கேட்கிறீர்கள் என்பதனை தெளிவுபடுத்தாதது ஏன்? என்றும், தேர்தலில் தோற்ற சின்ன அய்யா அன்புமணிக்கு எம்.பி. சீட் தந்ததை தவிர அதிமுக ஆட்சியில் வன்னிய மக்களுக்காக என்ன செய்தார்கள்? இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 வன்னிய உயிர்களை பறித்த ஆட்சிதானே அதிமுக ஆட்சி. அந்த கட்சிக்கு வரிந்து கட்டி ஆதரவு வழங்குவது ஏன்? பின்னணியில் பல ‘கோடி’ விவகாரங்கள் இருப்பதாக சொல்கிறார்களே.. உண்மையா? என்றும்,

வன்னியர்களுக்கு இருபது சதவிகித இட ஒதுக்கிடு வேண்டும் என்று சொன்ன நீங்கள், இப்போது உள் ஒதுக்கீடு போதும் என்று பின் வாங்கியது ஏன்? ‘பாதாளம் மட்டும் பாயும்’ சக்தி வாய்ந்த பல பேரங்கள்தான் காரணம் என்று பலராலும் பேசப்படுவது உண்மையா? என்றும், வன்னியர் இன மக்கள் பயனடையும் வகையில் பல சட்டங்களை நிறைவேற்றிய திமுகவை எதிர்க்கிறீர்கள். ஆனால், இதுவரை பலமுறை நீங்கள் கூட்டணி சேர்ந்த அதிமுக வன்னிய இன மக்களுக்காக வைத்த எந்த கோரிக்கையையாவது நிறைவேற்றி இருக்கிறதா? வன்னிய மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாத அதிமுக உங்களுக்கு இனிப்பதேன்? என்றும் ஆத்திரத்துடன் கடந்த வாரம் கேள்விகளை முன்வைத்திருந்த நிலையில், இன்றைக்கும் சில கேள்விகளை முன்வைத்திருக்கிறது முரசொலி. ‘இன்று 7வது நாள்…மருத்துவர் அய்யாவே பதில் எங்கே?’ என்ற தலைப்பில் அந்த கேள்விகளை முன்வைத்திருக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் அன்று கூறியதை ஏற்க மறுத்த நீங்கள் இன்று அதே உள் ஒதுக்கீட்டை கேட்பதேன்? வன்னிய இனத்தவருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் இருந்து எந்த கட்டத்திலும் பின் வாங்கமாட்டேன் என்று 2 மாதங்களுக்கு முன்பு கூட சூளுரைத்தீர்களே.. இன்று பின் வாங்குவதேன்?

அதிக ஆண்டு காலம் ஆண்டதாக கூறிவரும் அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு என்ன செய்தார்கள்? இந்த பல ஆண்டுகால ஆட்சியில் நீங்கள் பலமுறை அவர்களுடன் கூட்டணி வைத்தீர்களே, உங்கள் மகன் அன்புமணிக்கு எம்.பி., பதவி வாங்கியதை தவிர வன்னிய இன மக்களுக்கு பெற்றுத்தந்தது என்ன? இனி பாமக எந்த கட்சியோடும் கூட்டணி அமைக்காது . தனித்தே தேர்தலை சந்திக்கும் என்றும், அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தீர்களே.. அதிலாவது இப்போதும் உறுதியோடு இருக்கிறீர்களா? உங்களது பதிலுக்காக 7வது நாளாக காத்திருக்கும் பாட்டாளி சொந்தம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாமக மீதான திமுகவின் ஆத்திரம் இன்னமும் தீர்ந்தபாடில்லை போலிருக்கிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் அமித்ஷா

கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. பாஜக சார்பில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணனே களமிறங்கியிருக்கிறார். அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

வீடு வீடாக சென்ற அமித் ஷா… குமரியில் எடுபடுமா பாஜகவின் திட்டம்!

பொன். ராதாகிருஷ்ண‌னுக்கு ஆதரவாக வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் அமித்ஷா. தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம்...

பெண்ணுக்கு பணம் தேவை -அவருக்கு பெண் தேவை -கடைசியில் நடந்ததை பாருங்க.

ஒரு நிதி நிறுவனத்திற்கு கடன் கேட்டு சென்ற பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்ததால் அந்த நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்

லலிதா ஜுவல்லரியில் ரூ.1000 கோடி மோசடி; சேதாரம் என்று வரி ஏய்ப்பு

லலிதா ஜுவல்லரியின் 27 கிளைகளில் கடந்த 4ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக நடந்து வந்த சோதனையில் கணக்கில் வராத 1000 கோடி ரூபாய் பிடிபட்டது.
TopTamilNews