• March
    28
    Saturday

Main Area

Main



கப்பலில் வந்த 790 டன் வெங்காயம்..... இனி ஏறிய வேகத்தில் விலை இறங்கும் என எதிர்பார்ப்பு......

வெங்காயம்
வெங்காயம்

கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்காயம் உற்பத்தி அதிகம் நடைபெறும் பகுதிகளில் பெய்த எதிர்பாராத மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்தன. இதனால் உற்பத்தி பாதித்தது. இந்த சீசனில் வெங்காய உற்பத்தி சுமார் 26 சதவீதம் குறைந்தது. இதனால் சப்ளையில் நெருக்கடி ஏற்பட்டு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. தட்டுபாடு காரணமாக வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தது.

வெங்காயம்

இதனையடுத்து மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தது. மத்திய அரசு சார்பாக பொதுத்துறை நிறுவனமான எம்.எம்.டி.சி. வெளிநாடுகளில் 49,500 டன் வெங்காயம் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. தற்போது முதல் கட்டமாக மொத்தம் 790 டன் இறக்குமதி வெங்காயம் இந்தியா வந்து விட்டது. மும்பைக்கு வந்து இறங்கிய அந்த வெங்காயத்தில் கணிசமான அளவு டெல்லி மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு  வழங்கப்பட்டு வருகிறது.

வெங்காய மண்டி

இது குறித்து நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ரூ.50-60 (கிலோவுக்கு) என்ற அடக்கவிலையில், 290 மற்றும் 500 டன் என இரண்டு சரக்குகளாக ஏற்கனவே இறக்குமதி வெங்காயம் மும்பை வந்து விட்டது. தற்போது அடக்கவிலையில் மாநிலங்களுக்கு விநியோகம் செய்து வருகிறோம். இந்த மாத இறுதிக்குள் 12 ஆயிரம் டன் இறக்குமதி வெங்காயம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார். இறக்குமதிக்கு ஆர்டர் கொடுத்த வெங்காயம் வர தொடங்கி விட்டதால் வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை மளமளவென குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.