”5.16 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை’: 78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்!

”5.16 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை’: 78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

”5.16 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை’: 78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வந்தாலும் கூட, பண்டிகை காலக்கட்டத்தில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்புடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

”5.16 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை’: 78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்!

கடந்த 24 மணி நேரத்தில் 50,357 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 84,62,081 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 577 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,25,562 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 78,19,887 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததால் தற்போது 5,16,632 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் போது இன்று கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் சற்று அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.