‘ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்’ மத்திய அரசு அறிவிப்பு!

 

‘ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்’ மத்திய அரசு அறிவிப்பு!

11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.3,737 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் 30.67 லட்சம் ஊழியர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

‘ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்’ மத்திய அரசு அறிவிப்பு!

இந்த நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ரூ.2,081.68 கோடி ஒதுக்கப்படும் என்றும் ரூ.7,000 முதல் ரூ.17,951 வரை போனஸ் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.