சிவகார்த்திகேயனுக்கு 75 கோடி சம்பளம் கொடுக்கும் சன் பிக்சர்ஸ்

 

சிவகார்த்திகேயனுக்கு 75 கோடி சம்பளம் கொடுக்கும் சன் பிக்சர்ஸ்

திமுக ஆட்சியில் இருந்தால் சன் பிக்சர்ஸ் தீவிரமாக இயங்குவது வழக்கம். படங்களை தயாரிப்பதிலும் வாங்கி வெளியிடுவதில் படு பிசியாக இருக்கும். இந்த முறையும் அப்படித்தான் திமுக ஆட்சி அமைத்ததும் தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது சன் பிக்சர்ஸ்.

ரஜினி, விஜய் நடித்து வரும் படங்களை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ், அடுத்து பல முன்னணி நடிகர்களை வைத்து தயாரிக்க இருக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு 75 கோடி சம்பளம் கொடுக்கும் சன் பிக்சர்ஸ்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் என்ற பிசியாக இருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஐந்து படங்கள் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது சன்பிக்சர்ஸ்.

இந்த ஐந்து படங்களில் முதல் படத்தினை பாண்டிராஜ் இயக்குகிறார். சிவகார்த்திகேயன் முதன் முதலாக நடிகரானதும் பாண்டிராஜ் இயக்கத்தில்தான்.

சிவகார்த்திகேயனுக்கு 75 கோடி சம்பளம் கொடுக்கும் சன் பிக்சர்ஸ்

இரண்டு வருடங்களில் இந்த ஐந்து படங்களையும் முடித்து கொடுப்பதாக சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் போட்டுள்ளார். இதற்காக ஒரு படத்திற்கு 15 கோடி சம்பளம் வீதம் 5 படங்களுக்கும் சேர்த்து 75 கோடி சம்பளம் பேசியிருக்கிறது சன் பிக்சர்ஸ்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ’டாக்டர் ’படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரும்தொகைக்கு கேட்டிருக்கிறது. ஆனால், சேட்டிலைட் உரிமையோடு சேர்த்துக்கேட்டதால் சிக்கல் வந்திருக்கிறது. முன்னதாக சேட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியிருக்கிறது. இதை திரும்ப கேட்டு சன் பிக்சர்சிடம் பேச்சு வார்த்தை நடந்த சமயத்தில்தான் 5 படங்களுக்கான ஒப்பந்தம் நடைபெற்றதாக தகவல்.