75வயது காமுகனுக்கு பிறந்த குழந்தை; விற்க முயன்றபோது சிக்கினார்

 

75வயது காமுகனுக்கு பிறந்த குழந்தை; விற்க முயன்றபோது சிக்கினார்

பதினாறு வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து 75 வயது முதியவர் அன்வர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியது. ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் முதியவர் அன்வர் போலீசில் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

75வயது காமுகனுக்கு பிறந்த குழந்தை; விற்க முயன்றபோது சிக்கினார்

பிறந்த பச்சிளங்குழந்தையுடன் ராணிப்பேட்டை பகுதியில் ஒரு முதியவர் நிற்கிறார். அவர் அக்குழந்தையை விற்க பலரிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் ராணிப்பேட்டை மகளிர் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த முதியவரை போலீசார் பிடித்து வந்து விசாரித்தபோது, மேல்விசாரத்தை சேர்ந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து விற்கும் அன்வர் என்பது தெரியவந்தது.

கையில் இருக்கும் குழந்தை பற்றி விசாரித்தபோது, தனது பேத்திக்கு பிறந்த குழந்தை என்று சொல்லியிருக்கிறார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த போலீசார் துருவித்துருவி விசாரித்ததில் அன்வர் சொன்ன பதிலை கேட்டு ஆடிப்போய்விட்டனர்.

75வயது காமுகனுக்கு பிறந்த குழந்தை; விற்க முயன்றபோது சிக்கினார்

அது தனக்கு பிறந்த குழந்தைதான் என்று சொன்னதும், குழந்தைக்கு தாய் என்று கேட்டதும், அதற்கு அன்வர் சொன்ன பதிலால் மேலும் போலீசார் அதிர்ந்தனர். தன் கடை பக்கமாக வேப்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி வந்தபோது, சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாகவும், பின்னர் பலமுறை மிரட்டியே பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும், இதனால் அச்சிறுமிக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.

மேலும், சிறுமியும், அவரது தாயாரும் போலீசுக்கு புகார் கொடுக்க போதாதபடி தான் மிரட்டி வைத்திருந்ததாகவும் சொன்ன அன்வர், அதையும் மீறி அவர்கள் போலீசுக்கு போய்விட்டால் சாட்சியாக இருப்பது குழந்தைதான். அதனால் அக்குழந்தையை எடுத்துச்சென்று விற்றுவிடலாம் என்றுதான் குழந்தையை விற்க பலரிடம் பேசிக்கொண்டிருந்தேன் என்று சொல்லச்சொல்ல போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

இதையடுத்து குழந்தையை, தாயிடம் ஒப்படைத்துவிட்டு, அன்வரை போக்சோவில் சிறையில் தள்ளிவிட்டனர் போலீசார்.