லாரியை வழிமறித்து ரூ.8 கோடி மதிப்பிலான 7,500 செல்போன்கள் கொள்ளை; 3 பேர் கைது!

லாரியை வழிமறித்து ரூ.8 கோடி மதிப்பிலான 7,500 செல்போன்கள் கொள்ளை; 3 பேர் கைது!

நகரி அருகே லாரியை வழிமறித்து செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாரியை வழிமறித்து ரூ.8 கோடி மதிப்பிலான 7,500 செல்போன்கள் கொள்ளை; 3 பேர் கைது!

கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, 8 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரத்தில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற கண்டெயினர் லாரி ஒன்று புறப்பட்டது. அந்த லாரியை தமிழக- ஆந்திர எல்லையான நகரியில் வழிமறித்த கொள்ளையர்கள், ஓட்டுனர் மற்றும் கிளீனரை தாக்கிவிட்டு லாரியில் இருந்த செல்போன்களை வேறு லாரிக்கு ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றனர்.

லாரியை வழிமறித்து ரூ.8 கோடி மதிப்பிலான 7,500 செல்போன்கள் கொள்ளை; 3 பேர் கைது!

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மத்தியபிரதேசத்தை சேர்ந்த நபர்கள் இவ்வாறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், போலீசார் பங்களாதேஷ் வரை சென்று கொள்ளையர்களை தேடினர். ஒரு கட்டத்தில் மத்திய பிரதேசத்தில் கொள்ளையர்கள் இருப்பதை அறிந்த போலீசார், அங்கு என்று அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.

லாரியை வழிமறித்து ரூ.8 கோடி மதிப்பிலான 7,500 செல்போன்கள் கொள்ளை; 3 பேர் கைது!

மேலும், அவர்களிடம் இருந்து 7500 செல்போன்கள், கடத்தல் லாரி மற்றும் 3 பைக்குகளை பறிமுதல் செய்த பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.