ஒரு மாட்டு கொட்டகையில் தனியாக தூங்கிய பாட்டியை பலாத்காரம் செய்து கொன்று விட்டு, அவரிடமிருந்து நகையை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தார்கள் .
![Elderly woman raped and murdered in Andhra Pradesh [Representative image]](https://imgk.timesnownews.com/story/iStock-1225270121_4_1.jpg?tr=w-600,h-450,fo-auto)
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் தவணம்பள்ளே தாலுகாவில் உள்ள கோத்பள்ளி கிராமத்தின் புறநகரில் உள்ள ஒரு மாட்டு கொட்டகையில் கடந்த செவ்வாய் கிழமை இரவில் ஒரு 75 வயதான மூதாட்டி தூங்கி கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியே ,போலீசின் பழைய குற்றவாளி சுதாகர் என்பவர் குடி போதையில் வந்து கொண்டிருந்தார் .அப்போது அவரின் கண்ணில் அந்த 75 வயதான பாட்டி தென்பட்டார் .மேலும் அவரின் கழுத்திலிருந்த தங்க நகைகளும் அவரின் கண்ணில் பட்டது .
அதனால் அந்த வாலிபர் அந்த பாட்டியை அந்த மாட்டு கொட்டகையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் .அதன் பிறகு அந்த பாட்டியின் கழுத்திலிருந்த தங்க நகைகளை எடுத்து கொண்டு அந்த பாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்தார் .அதன் பிறகு அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .
மறுநாள் காலையில் அந்த மூதாட்டி இறந்து கிடப்பதை பார்த்த அவரின் உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமெராக்களை ஆராய்ந்து பார்த்தார்கள் .அப்போது ஒரு பழைய குற்றவாளி சுதாகர் என்பவர் அந்த பகுதியில் நடமாடுவதை கண்டு அவரை பிடித்து விசாரித்தார்கள் .அப்போது தான் அந்த மூதாட்டியை பலாத்காரம் செய்து விட்டு, நகையை கொள்ளையடித்து விட்டு, அவரை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் .அதன் பிறகு போலீசார் அவர் மீது பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து அவரை மீண்டும் சிறையில் அடைத்தார்கள் .
