“தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு” : இறங்கி அடித்த ஸ்டாலின் ; தட்டிதூக்கிய தேர்தல் அறிக்கை!!!

 

“தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு” : இறங்கி அடித்த ஸ்டாலின் ; தட்டிதூக்கிய  தேர்தல் அறிக்கை!!!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ள நிலையில் மிக முக்கியமான வாக்குறுதிகளை மட்டும் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

*அனைத்து கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.

*எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்

*கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

*எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும்

*மலைக்கோயில்களில் கேபிள் கார் வசதி ஏற்படுத்தி தரப்படும்

*கிராம பூசாரிகளுக்கு ஊதியம் ,ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.

*இந்து ஆலயங்கள் புனரமைப்பு பணிக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

*மசூதி, தேவாலயங்களை சீரமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

“தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு” : இறங்கி அடித்த ஸ்டாலின் ; தட்டிதூக்கிய  தேர்தல் அறிக்கை!!!

*அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் மூலம் முறையான பயிற்சி பெற்று 16 ஆண்டுகளாக வேலை என்று காத்திருக்கும் அர்ச்சகர்களுக்கு உடனே பணி

*முதல் தலைமுறை பட்டதாரிக்கு அரசு வேலையில் முன்னுரிமை

*விவசாயிகள் மின்மோட்டார் வாங்க ரூ.10000 மானியம்

*60 வயதுக்கு மேற்பட்டோருக்கு உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்.

*கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ,உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஓய்வுதியம் 1500 ரூபாயாக அதிகரிக்கப்படும்

*ஏழை பசி தீர்க்க கலைஞர் உணவகம் 500 இடங்களில் ஆரம்பிக்கப்படும்

*ஏழை மக்களுக்கு இரவு நேரங்களில் தங்க காப்பகங்கள்.

*கலைஞர் காப்பீடு திட்டமும் வருமுன் காப்போம் திட்டம் மேம்படுத்தப்படும்

*தமிழக ஆறுகள் அனைத்தும் மாசடையாமல் காக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும்

“தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு” : இறங்கி அடித்த ஸ்டாலின் ; தட்டிதூக்கிய  தேர்தல் அறிக்கை!!!

*புகையில்லா பேருந்துகள் மாநகராட்சியில் இயக்கப்படும்

*உயிரிழந்த மருத்துவர்களுக்கு அரசு அலுவலர்களுக்கு, முன்கள பணியாளர்களுக்கு ,உரிய இழப்பீடு வழங்கப்படும்

*அரசு ஊழியர் வழங்கப்படும் நிதி 3 லட்சம் ரூபாய் என்பது ஐந்து லட்சம் ரூபாயாக ஆக்கப்படும்.

*ஊட்டச்சத்து குறைந்து பிறக்கும் குழந்தைகளுக்கு உணவு கூடை திட்டம் அமல்படுத்தப்படும்

*பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நலனுக்காக தனி ஆணையம் அமைக்கப்படும்.

“தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு” : இறங்கி அடித்த ஸ்டாலின் ; தட்டிதூக்கிய  தேர்தல் அறிக்கை!!!

*ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

*பேறுகால உதவி தொகை 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்

*நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்படும்.

*முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

*ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்

*அரசுத்துறைகள் ,கல்வி நிலையங்கள் காலியாக உள்ள கல்வி மையங்களில் 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்

*புதிதாக இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; 75 விழுக்காடு தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு.