தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 75 கோடியில் ஆக்சிஜன் வசதி!

தமிழகம்  முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 75 கோடியில் ஆக்சிஜன் வசதி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட3,943 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

தமிழகம்  முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 75 கோடியில் ஆக்சிஜன் வசதி!

16 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது.  இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்  முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 75 கோடியில் ஆக்சிஜன் வசதி!

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 75 கோடியில் ஆக்சிஜன் வசதி செய்யப்படவுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள அரசு மருத்துவமனைகளில், பைப் லைன் மூலம் ஆக்சிஜன் வசதி அமைக்கப்படும். சென்னையில் மட்டும் 11 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட உள்ளது.